தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

தடை செய்யப்பட்ட 30 கிருமிநாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன


முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு கொலை மிரட்டல்
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 02:31.55 AM GMT ]
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், இரத்தினபுரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயகொடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் பிரசாந்த ஜயகொடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் ரத்தினபுரி நகரில் இயங்கி வந்த இரவு நேர களியாட்ட விடுதி மற்றும் கரோக்கே ஒன்றை சுற்றி வளைத்ததன் காரணமாக இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேரடியாகவே இந்த சுற்றி வளைப்பில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் கொலை மிரட்டல் அதிகரித்துச் செல்வதனால் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
“அதிகமாக ஆட்டம் போடாதே குடும்பத்துடன் கொன்று விடுவோம்” என தொலைபேசி மூலம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 30 கிருமிநாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 04:08.13 AM GMT ]
தடை செய்யப்பட்ட 30 கிருமி நாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் கிருமிநாசினிப் பதிவாளர் ஆகியோருக்கு தெரிந்த இந்த கிருமிநாசினிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளே இவ்வாறு இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன.
சட்டத்தின் அடிப்படையில் குறித்த 30 கிருமி நாசினிகளும் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பல்வேறு விற்பனைக் குறிகளின் ஊடாக இந்த கிருமி நாசினிகள் இலங்கையில் தொடர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten