கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் எழுத்து மூலம் பெறப்படுகின்றன. நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ப்ளொம்பர்க், “நேற்றிரவு உளவுத்துறை எஃப்.பி.ஐ. இந்த தகவலை எம்முடன் பகிர்ந்து கொண்டனர். அதன்படி, பாஸ்டன் குண்டுவெடிப்பு முடிந்தபின் சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரும் காரில் நியூயார்க் செல்ல திட்டமிட்டு இருந்தனர். நியூயார்க் டைம் சதுக்கத்தில் வெடிக்க வைப்பதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட நிலையில் இருந்தன. வெடிகுண்டுகளை அவர்களால் நேர்த்தியாக தயாரிக்க முடியும் என்பதை நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.
பாஸ்டன் குண்டு வெடிப்பின்பின் நியூயார்க் சென்று முதலில் பார்ட்டி வைத்து கொண்டாட சகோதரர் இருவரும் திட்டமிட்டிருந்தனர் என விசாரணையின்போது தற்போது உயிருடன் உள்ள சந்தேக நபர் தெரிவித்தார். பாஸ்டனில் வெற்றிகரமாக குண்டு வெடிப்பு நடத்தியதற்காகவே பார்ட்டி.நியூயார்க்கில் பார்ட்டி முடிந்ததும் அடுத்த தாக்குதலை அங்கு அரங்கேற்றுவது என்றும், புகழ்பெற்ற டைம் சதுக்கத்தில் குண்டுகளை வெடிக்க வைப்பதே அடுத்த தாக்குதல் எனவும் தீர்மானித்து இருந்தனர்.ஆனால், பாஸ்டன் குண்டுவெடிப்பின்பின் இருவரும் சிக்கிக் கொள்ள, ஒருவர் உயிரிழந்தார். மற்றைய சகோதரர் போலீஸ் காவலில் உள்ளார். சகோதரர்கள் இருவரும் இதற்குமுன் இரு தடவைகள் நியூயார்க் சென்றுவிட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் டைம் சதுக்கத்துக்கும் சென்றிருந்தனர்” என்று தெரிவித்தார்.
போலீஸ் கமிஸனர் கெல்லி, “கடந்த ஆண்டு ஏப்ரலில் சந்தேக நபர் நியூயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் எம்மிடம் உள்ளன என்றார்.இதற்கிடையே பிரிட்டிஷ் பத்திரிகை டெயிலி டெலிகிராஃப், சந்தேக நபர் நியூயார்க் டைம் சதுக்கத்தில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது. (இந்த கட்டுரையின் முதல் பக்கத்தில் அந்த போட்டோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.)போட்டோவில் காணப்படும் நண்பர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர் எனவும், அவர்களில் ஒருவர் மட்டும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten