தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

கைத்தொலைபேசிக்கு மீள் நிரப்ப மறுத்ததால் கஞ்சாப் பொதியை வைத்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்!- மன்னாரில் சம்பவம்!


மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (கொமினிக்கேசன்) சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடாவடிகத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது கையடக்கத் தொலைபேசிக்கு மீள் நிரப்புச் (றீலோட்) செய்து விடுமாறும் பணத்தை பின்பு தருவதாகவும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கூறியுள்ளார்.
அதற்கு தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததினால், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கஞ்சா பொதியினை தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கடந்த புதன் கிழமை மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (கொமினிக்கேசன்) சென்று தனது கையடக்கத் தொலைபேசிக்கு றீலோட் செய்து விடுமாறும் பணத்தை பின்பு தருவதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு குறித்த நிலையத்தின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நான் யார் என்று உனக்கு நாளைக்கு காட்டுகின்றேன் என கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.
பின் நேற்று மதியம் 2 மணியளவில் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், தான் மறைத்து கொண்டு வந்த கஞ்சாப்பொதியை தொலைத்தொடர்பு நிலையத்திற்குள் வைக்க முயற்சி செய்த போது அங்கு நின்றவர்கள் இவருடைய செயற்பாட்டை கண்டு நிலையில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் கேள்வி கேட்க முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் அவசர பொலிஸ் சேவைக்கு தொடர்பை ஏற்படுத்திய நிலையில், அவசர பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்கள் பொலிஸாரிடம் நியாயத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் நின்ற பொலிஸார் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் மீண்டும் இன்று மதியம் குறித்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் வேறு சில பொலிஸாரை அவ்விடத்திற்கு அழைத்து வந்து குறித்த தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிளின் நடவடிக்கை தொடர்பாக தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளர், மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மன்னாரில் தென்பகுதியைச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்ஸிம் பொலிஸ் கான்ஸ்டபிள் பலர் நீதியான முறையில் கடமையாற்றுகின்ற நிலையில், மன்னாரைச் சேர்ந்த குறித்த தமிழ் பொலிஸ் காண்ஸ்டபிளின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு மன்னார் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten