திருவண்ணாமலையை சேர்ந்த மாற்று திறனாளி தேவேந்திரன். அரசு ஊழியராகவும் உள்ளார். ஈழத்தமிழர்கள் மீது கருணை கொண்ட இவர் வார இறுதி நாட்களில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் சென்று ஈழத்தமிழர்களுக்காக பிரச்சாரம் செய்வார்.
கடந்த 21ந்தேதி திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில், ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த தங்களது கருத்தை மிஸ்ட்கோல் மூலம் தெரிவியுங்கள் என சொல்லிக்கொண்டு இருந்துள்ளார்கள்.
அப்போது பேருந்து நிலைய பாதுகாப்பில் இருந்த சில காவலர்கள் தேவேந்திரனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கடந்த 22ந் திகதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு தந்துவிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
அவரை நாம் சந்தித்தபோது, இரவில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தேன். அங்கே வந்த போலிஸ் கண் தெரியாத நாய்க்கு எதுக்கு இந்த வேலை என திட்டினாங்க. நான் எதிர்த்து பேசியதற்க்கு அடித்து இழுத்து வந்து வெளியில் விட்டார்கள். அதனால் கையில் இருந்த கை கம்பை உடைத்தார்கள் என வேதனையை வெளிப்படுத்தினார்.
இதுபற்றி காவற்துறை வட்டாரத்தில் கேட்டபோது, அவர் குடித்துவிட்டு தகராறு பண்ணுறார் அதான் வேறெதுவுமில்லை என்றனர். கண் தெரியாதவரை அடித்து தங்களுக்கும் மனிதாபிமானத்துக்கும் வெகு தூரம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
Oh,what a brutal attack on blind man
BeantwoordenVerwijderen