தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013

ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ மயமாக்கலை அனுமதிக்க முடியாது: அரியநேத்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 05:14.40 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும் இராணுவ மயமாக்கலை அனுமதிக்க முடியாது என்கிறார் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டு மாவட்டத்தில் புதிய இராணுவ முகாம்களுக்காக 12 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை இராணுவம் சவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேத்திரன் மேலுள்ளவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
தற்போது நாட்டில் பூரண சமாதானம் நிலவுவதாக அரசாங்கம் கூறி வருகின்றது அப்படி இருக்கும்போது தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ மயமாக்கலை உருவாக்குவதானது ஒருபோதும் சமாதானத்தை தோற்றுவிக்கும் செயற்பாடாக அமையாது.
அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிகொள்வதற்கு சர்வதேசமும் இந்தியாவும் உதவி செய்தன. ஆனால் யுத்தத்திற்கு பின்பு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் சுதந்திரமான வாழ்க்கை என்ற விடயத்தில் சர்வதேசமும் இந்தியாவும் பாராமுகமாக செயற்படுகின்றன.
யுத்தம் முடிவுற்று 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்கள் இன்னும் சொல்லொண்ணா துயரங்களுடனேயே வாழ்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து இராணுவம் இன்னும் வெளியேறவில்லை சம்பூர் மக்கள் இன்னுமே பூரணமாகக் குடியேற்றப்படவில்லை.
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலங்களை இராணுவம் சவீகரித்துள்ளது. அந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களை அந்த மக்கள் முன்னெடுத்து வருகின்றனா.
எனவே இவ்வாறு இருக்கும்போது மட்டக்களப்பிலும் புதிய பாரிய இராணுவ முகாம்களுக்காக 12 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவற்றை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவ தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.
தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை மேற்கொள்ளக் கூடாது ஏற்கனவே இராணுவம் பிடித்துள்ள தமிழ் மக்களின் நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் புதிய இராணுவ முகாம்களை அமைக்கக் கூடாது போன்ற விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சர்வதேச அமைப்புகளும் அரசை வற்புறுத்திக்கொண்டு வருகின்ற நேரத்தில் புதிய இராணுவ முகாம்களை அமைப்பதற்காக இராணுவம் நிலங்களை அடையாளப்படுத்தி அவற்றை சுவீகரிக்க நடிவடிக்கை மேற்கொண்டு வருவதானது தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசு மீது ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தாது.
மேலும் அரசின் இந்தச் செயற்பாடானது தமிழ் மக்களுக்கு ஒருபோதும் எவ்வாறான அரசியல் தீர்வையும் பெற்றுத் தருவதற்கு வழிவகுக்காது மாறாக அது இன விரிசலை உண்டாக்கி இன ஐக்கியத்திற்கு சாவுமணி அடிப்பதற்கான சூழலையே தோற்றுவிக்கும்.
அத்தடன் மட்டக்களப்பில் இராணுவம் நிலங்களை அடையாளப்படுத்தி சுவீகரிப்பதற்கு முன்னர் அங்குள்ள மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் மனோநிலையினையும் அறிய முற்பட வேண்டும் தற்போது நாட்டில் சிவில் நிருவாகம் உள்ளது அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லை இந்த நேரத்தில் அரசாங்க அதிபரையோ அல்லது வேறு அதிகாரிகளையோ இராணுவம் எந்த வகையிலும் வற்புறுத்தி தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.
எனவே மட்டக்களப்பையும் இராணுவ மயமாக்குகின்ற இந்த விடயத்தில் அரசாங்கம் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 05:19.35 AM GMT ]
இனப்படுகொலையை நடத்திய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது. 
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள்.
இவர்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி மே 12ஆம் திகதி அன்று காலை புறப்படுகின்றனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரியில் புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி. வழியாக தஞ்சைக்கும் கன்னியாகுமரியில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வழியாக தஞ்சைக்கும் விருதுநகரில் தொடங்கி தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி வழியாக தஞ்சைக்கும் சென்னையில் தொடங்கி திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் வழியாக தஞ்சைக்கும் தர்மபுரியில் தொடங்கி கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை. பெரம்பலூர், அரியலூர், வழியாக தஞ்சைக்குமாக 5 குழுக்கள் பயணிக்கின்றன.
மாணவர்களின் இந்த சுடர் பயணம் தஞ்சாவூரில் மே 17ஆம் திகதி அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமிக்கிறது. அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட தமிழர் ஆதரவு அமைப்புக்கள் அனைவரும் திரளான வரவேற்பு வழங்கிட இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கருத்தரங்கம் இதனிடையே தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக செல்வா தலைமையில் அமைதி வழியில் நடந்தது முதல் கட்ட போராட்டம்.
அடுத்து பிரபாகரன் தலைமையில் ஆயுதவழி போராட்டம் நடைபெற்றது. எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ? அதே மாதிரி ஆயுதவழி போராட்டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது. வீழ்வது தவறல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. நாம் மீண்டும் எழுவோம். இப்போது நடப்பது மூன்றாவது கட்ட போராட்டம்.
இலங்கை ஜனாதிபதிக்கும் அவரது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப்போராட்டம். இந்த சிக்கலை உலக நாடுகளூக்கு கொண்டு சென்று அதன் மூலமாக வெற்றியைப்பெறுவோம் என்றார்.   

Geen opmerkingen:

Een reactie posten