தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் முறையாக வாங்கிக்கட்டினார்!சுன்னாகத்தில் சம்பவம்


அடையாள அணி வகுப்பிற்காக சென்று தப்பியோடிய முன்னாள் போராளி கைது
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 09:31.00 AM GMT ]
அடையாள அணி வகுப்பிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தப்பியோடிய புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்ட வேளை, தப்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் பொலிஸார் நடாத்திய சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த கைதிக்கு எதிராக நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி-


சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் முறையாக வாங்கிக்கட்டினார்!சுன்னாகத்தில் சம்பவம்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 09:18.55 AM GMT ]
சுன்னாகம் சந்தைப் பகுதயில் சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் சந்தை வியாபாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சுன்னாகம் நவீன சந்தைப் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான சுமார் 63 வயது மதிக்கத் தக்க முதியவரே இவ்வாறு அகப்பட்டவராகும்.
மாலை வேளையில் சுமார் 11 வயது மதிக்கத் தக்க சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டதை அவதானித்த வர்த்தகர்கள் முதியவரை கவனித்து விரட்டியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரை நவீன சந்தைப் பகுதியில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாதென கூறி சபையினாலும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten