தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

13வது திருத்தச் சட்டத்தை ஒழிக்காமல் வடக்குத் தேர்தலை நடத்தக் கூடாது: அமைச்சர் விமல் வீரவன்ச!!


[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 11:13.38 AM GMT ]
13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காது வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது. அவ்வாறு அல்லாது மீண்டும் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு இடமளிக்கும் வகையில் வடமாகாண தேர்தல் அமைந்து விடக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுந்திர முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் அதற்கு ஒருபோதும் நாம் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை.
இச் செயற்பாடானது இரண்டாவது தமிழீழத்திற்கான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும்.
எனவே தான் எமது கட்சி சார்பாக இதனை மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் தனியான மேதினக் கூட்டத்தையும் பேரணியையும் நடத்தவுள்ளோம்.
இதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் தான் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
எமது இராணுவத்தினர் தியகங்கள் பல செய்து மீட்டுத் தந்ததை நாம் ஒருபோதும் இழக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.


Geen opmerkingen:

Een reactie posten