தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் ஆபத்தானவர்கள் - சந்திரிகா


சர்வதேச ஊடகங்கள் இலங்கையை கொலைக் களமாக சித்தரித்தன! மனிதாபிமான நடவடிக்கையை யுத்தமாக காட்டியது தவறு!- ஹெஹலிய
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 10:23.47 AM GMT ]
பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேச ஊடகம் கொலைக்களமாக சித்தரித்தமையே தவறு என ஹெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மோதல் தீர்வே தவிர யுத்தமல்ல. எந்த நாட்டிலும் இவ்வாறான மோதல் தீர்வில் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
இலங்கையிலும் ஊடகங்கள் இதில் முக்கிய பங்காற்றியதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
குறிப்பிட்ட வரையறைக்குள் அநேக விடயங்கள் குறித்து சார்க் நாடுகளிடையே கலந்தாலோசிக்க முடியும். ஆனால் மற்ற நாட்டு உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்ய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சார்க் தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்த சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் மோதல் தீர்வில் ஊடகங்களின் பங்களிப்பும் என்ற தொனிப்பொருளிலான மாநாடு நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமானது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த மாநாட்டில் சார்க் நாட்டு தூதுக்குழுவினர் பங்கேற்றனர். மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க பிரதான உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெஹலிய உரையாற்றுகையில்,
30 வருட யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. இத்தகைய மோசமான மோதல் உலகில் பல நாடுகள் முகம்கொடுத்தன. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை முழுமையாக மீட்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தார். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நம்பிக்கையும் பொறிமுறையும் அவருக்கிருந்தது.
இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்கு பிரதானமானது என்பதால் அது குறித்து ஜனாதிபதி என்னுடன் ஆராய்ந்தார். ஊடகங்களை சரியாக கையாளாவிட்டால் யுத்தத்திற்கு முடிவு கட்டுவது கடினம் என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார். அதன்படியே ஊடக மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது. நானும் இதில் பங்காளியாக இருந்தது குறித்து பெருமை அடைகிறேன்.
சார்க் நாடுகள் பூகோள ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுகின்றன. ஏனைய நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது செயற்படுவதன் மூலம் எமக்கு தொடர்ந்து ஒன்றாக செயற்பட முடியும். சார்க் எனும் கப்பலுக்கு சுழல் காற்று, பாரிய அலைகள் என எந்த சவால் வந்தாலும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் முகம் கொடுக்க முடியும். ஒருவருக்கொருவர் தன்னிச்சையாக உதவலாம்.
எமக்கு ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பல விடயங்கள் உள்ளன.  30 வருட யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. சமாதானத்தை கட்டியெழுப்புதலும் மோதல் தீர்வில் ஊடகங்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் ஆராய்வதற்கு இலங்கையை தவிர வேறு உகந்த நாடு இருக்க முடியாது.
சர்வதேச ஊடகங்கள் இலங்கையை கொலைப்பூமியாக காட்டின. ஆனால் இது அபிவிருத்தியின் பூமி. இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை சார்க் நாடுகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் பதிலளிக்க முடியும் என்றார். மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க.
மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறியதாவது:
யுத்த காலத்தில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றின. கடந்த அரசுகளால் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு முடிவு கட்டினார். மக்கள் இராணுவத்திற்கு முழு ஆதரவு வழங்கினர்.
யுத்த முடிவின் பின் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பெருமளவு பொதுமக்கள் பலியானதாக சில சர்வதேச ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் குற்றஞ்சாட்டின. அதிகமான சர்வதேச ஊடகங்கள் புலிகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வெளியிடவில்லை.
புனர்வாழ்வு பெற்ற 11,546 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகமயப் படுத்தப்பட்டுள்ளனர். 3 இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, 99 வீத மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.
ஆனால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, காயப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டமை, கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்தல், வீடுகள் நொருங்கியமை, ஊர்கள் அழிந்தமை பற்றியோ உரையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் ஆபத்தானவர்கள் - சந்திரிகா
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 10:00.34 AM GMT ]
இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக சந்திரிகா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாவிலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆ.ட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை. அவர்கள் வேறு நாடுகளிடம் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவே போரிட்டனர்.

மன்னர்கள் எதிரிகள் வரும் போது தாக்குதல்களை நடத்தினார்களே தவிர இனவாதத்தில் போதை ஏறி நாட்டில் உள்ள ஏனைய இனங்களையும் மத தலங்களை தாக்கவில்லை. இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல மதங்களை கொண்ட நாடு. அவர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு.
எனினும் தற்போது ஒரு சிறிய தரப்பினர் முன்னெடுத்து வரும் அடிப்படைவாத வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பேரழிவுக்கும், சேதத்திற்கும் காரணமாக அமைந்து விடும். இவ்வாறான அடிப்படைவாதிகள் எழுச்சி பெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தலையிட்டு அதனை அடக்க வேண்டும். இது அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு. இதனை விடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியை கொடுத்தும் கொள்கையை பின்பற்றினால் பாரிய அழிவே ஏற்படும்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் பாதிப்பு மிகவும் பாரியளவானது. ஏற்கனவே பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போல் நாட்டு மக்கள் என்ற வகையில் உரிமைகளும், கடமைகளும் உள்ளன. பௌத்தர்கள் என்ற வகையில் நாம் அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும்.
நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை போன்ற உன்னதமான மனித பண்புகளை பேசும் மதங்கள் வேறு எதுவும் இல்லை. மத, இனவாத பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதம் பௌத்த மதம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten