தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

முஸ்லீம் சிறுமியுடன் சென்ற அமெரிக்க தூதர்: சிங்களவர்கள் ஆத்திரம் !


கடந்தவாரம் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு உத்தியோக பற்றற்ற விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் சுசன் அவர்கள் தொடர்பாக இலங்கை அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. யாழ் சென்ற அவர் அங்கே பல விடையங்களை பொதுமக்களோடு பேசியிருந்தார். தான் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவில்லை என்று கூறிய அவர், அரச புலனாய்வுப் பிரிவினர் தன்னை பின் தொடர்வதை தவிர்த்துக்கொண்டார். இதுபோலவே அவர் கிழக்கிற்கும் சென்று அங்குள்ள தமிழ் மக்கள், முஸ்லீம் மக்களோடு பேசியுள்ளார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று அவர் மக்களிடம் கேட்டு அறிந்துள்ளார். மேலும் கிழக்கில் நடைபெற்ற சில கொலைகள், கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர்பாகவும் அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்துள்ளார். இவை அனைத்தும் இலங்கையில் உள்ள ஒரு வெளிநாட்டு தூதுவர் செய்யக்கூடாத செயல் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. 

இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு தூதுவர் என்ற வகையில் சூசன் அவர்கள் தனது பணிக்கு அப்பால் பட்ட விடையங்களை ஆராய்வதாகவும், மற்றும் உள்நாட்டு விடையங்களில் தலையிடுவதாகவும் சிங்கள ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை கிழக்கு மாகாணத்துக்குச் சென்ற சூசன் அவர்கள், அங்கு முஸ்லீம் சிறுமி ஒருவரை தூக்கிக்கொண்டு , கூட்டம் நடைபெறும் இடம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். இதனால் பொதுபல சேனா போன்ற சிங்கள அமைப்புகள் கடும் கோபம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் வட கிழக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு இம் மாகாணங்கள் தயார் நிலையில் தான் உள்ளதா ? இல்லை அரச தரப்பு தனது அடக்கு முறைகளை இங்கே பிரயோகித்து வருகிறதா என்று ஆராயவே அமெரிக்க தூதர் இவ்விடங்களுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

எது எவ்வாறு இருந்தாலும் அமெரிக்க வட கிழக்கில் ஒரு கண் வைத்துள்ளது என்றும், அங்கே நடைபெறவுள்ள தேர்தல்களை மிக உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் சில செய்திகள் வெளியாகி, இலங்கை அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்பது தான் உண்மை நிலை ஆகும் !

Geen opmerkingen:

Een reactie posten