தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

செங்கலடி தம்பதியினர் படுகொலை: மட்டு.பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கைகள்!


மாணவி பலாத்காரம்: பள்ளிவாசலில் சத்தியம் செய்வேன் நான் குற்றவாளி இல்லை! - காத்தான்குடி நகரசபை உறுப்பினர்
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 10:42.07 AM GMT ]
நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என்று ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் தெரிவித்தார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் கடந்த திங்கட்கிழமையன்று மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

'மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் மட்டக்களப்பு-காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்.

அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான எண்ணத்துடன் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை. எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன்.

அல்லாஹ்மீது ஆணையாக நான் அம் மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்.

என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் எனவும் நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல வருடங்களாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா? என்றும் நான் கேட்க விரும்புகின்றேன்.

இதேவேளை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் மாணவி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செங்கலடி தம்பதியினர் படுகொலை: மட்டு.பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கைகள்
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 10:58.07 AM GMT ]
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலைச் சம்பவத்தையடுத்து, பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீதான தீவிர கண்காணிப்புகளும் ஒழுக்கங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மாணவர் ஒருவர் எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றை சரியான முறையில் பேணப்படுவதற்கு அதிரடியாக நடவடிக்கைகள் பல பாடசாலைகளில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன.
சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் நேற்று முதல் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வலியுறுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்குரிய நடைமுறைகளை மீறியவர்கள் மீது பாடசாலை ஒழுக்காற்றுக் குழுக்களினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிக தலைமுடி வைத்திருந்த ஆண் மாணவர்கள், சேட்டினை வெளியில் விட்டுத்திரிந்த மாணவர்கள், குறுகிய கை கொண்ட சட்டையணிந்து வரும் பெண் மாணவிகள், தலை முடியினை ஒழுங்கற்ற முறையில் கட்டிவரும் பெண் மாணவிகள் என பல்வேறு ஒழுக்கவிதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அம் மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களின் நிலைமை தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டது.
இத்தகைய அதிரடி நடவடிக்கைகளினால் மாணவர்களின் ஒழுக்கம் நிலை நாட்டப்படுவதையிட்டு பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், பெரியார்கள் மகிழ்ச்சி தெரிவித்தனையும் அவதானிக்க முடிந்தது.
அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்திற்கு காரணமான தம்பதியினரின் மகள் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் மத்தியில் விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten