தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

சிறிலங்காவில் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை !


சிறிலங்காவில் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாத பட்சத்தில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கொழும்பில் நடத்திய விசேட வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் வேலைத்திட்டத்தின் அதிகளவான பங்கை அமெரிக்காவே வகித்தது. இந்த தடை காரணமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் கிடைக்கும் வலையமைப்பை முடக்கவும் அதனை முடிவுக்கு கொண்டு வரவும் முடிந்தது. புலிகள் அமைப்பு இன்னும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் சவாலை நாம் அறிந்துள்ளோம். அதேபோல் முக்கியமான விடயமாக சிரமமான சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் முன்னெடுத்துச் செல்லும் சவாலும் மிகவும் முக்கியமானது.
ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும் நாடாகும். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டனர். அதேபோல் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை.
2009 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை 2010 ஹெக்நேலியகொட காணாமல் போனமை 2011 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் என்பன இவ்வாறான சம்பவங்களாகும்.
முழு உலகத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten