தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

''பிரபாகரனைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்'' என கூறியது ஜெயலலிதா! - கனிமொழி!!


கொலைக் குற்றவாளிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 09:14.05 AM GMT ]
ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பின் கீழ் கொலைக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவர் விடுதலை பெற்றிருப்பதாக புனர்வாழ்வளிப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐ.தே.க. எம்.பி. அஜித் பெரேரா, 2005 முதல் 2012.06.01 வரையான காலப்பகுதியில் விடுதலை பெற்ற மரண தண்டனைக் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு அமைச்சினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி மூன்று வருடங்களும் 6 நாட்களும் சிறையில் இருந்துவந்த பெண் கைதி 2008.03.08ஆம் திகதியும் மூன்று வருடங்களும் 23 நாட்களும் சிறையில் இருந்த ஆண் கைதி 2010.08.26ஆம் திகதியும் பொது மன்னிப்பின் பேரின் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவருமே தனிப்பட்ட கொலைக் குற்றவாளிகளாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

''பிரபாகரனைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்'' என கூறியது ஜெயலலிதா! - கனிமொழி
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 08:24.42 AM GMT ] [ விகடன் ]
அனல் தணலாக தி.மு.க. மீது விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் சளைக்காமல் கனிமொழி விகடனுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகல் முடிவு தாமதமான ஒன்று. என்ற விமர்சனம் குறித்து?''
''இலங்கைத் தமிழரின் புனர்வாழ்வு முன்னெடுப்புகளில் இந்தியாவின் பங்குதான் அதிகமாக இருக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் நிலையாக இருந்தது. அதற்கேற்ப ஐ.நா-வில் இன்னும் தீர்க்கமான தீர்மானத்தை இந்தியா இயற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு தீர்மானம் கேட்டோம். அதைக்கூட காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் அரசு செயல்படுவதற்குப் போதுமான அவகாசம் கொடுத்த பிறகு, காங்கிரஸ் தரப்பில் எந்த முனைப்பும் இல்லை என்று ஊர்ஜிதமான பிறகே வெளியேறினோம். இதில் எந்த இடத்திலும் தாமதத்துக்கான காரணிகள் இல்லை!''

''காங்கிரஸ் கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாது என்பதே, இந்தத் திடீர் விலகலுக்குக் காரணமா?''
''தி.மு.க. என்ற பேரியக்கம் தேர்தலுக்காக மட்டுமே எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சி உட்பட அதிக இழப்புகளை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். இதற்கு முன் எண்ணிலடங்காப் போராட்டங்களை தி.மு.க. முன்னெடுத்திருக்கிறது. அவற்றில் எல்லாம் தேர்தலை முன்னிறுத்தியா ஈடுபட்டோம்? ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலத்தைத் தேர்தல் பிரச்சினையாக முன்வைக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தும்விடாதீர்கள். ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் செய்வதுதான், அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம்!''
''ஒரு காலத்தில் தி.மு.க-வுக்கு இளைஞர்களிடையே எழுந்த எழுச்சிக்கு விடுதலைப் புலிகள் ஆதரவும் ஒரு காரணம். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகளுக்கு அவசியம் கை கொடுக்க வேண்டிய சமயம், அந்தப் பொறுப்பைத் தி.மு.க. தட்டிக்கழித்தது என்று சொல்லலாமா?''
''நான் ஒன்று கேட்கவா? விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கக் கோரியது யார்? முதல்வர் ஜெயலலிதாதானே! தமிழகத்தில் விடுதலைப் புலிகளை மையமாகவைத்து ஓர் உரையாடல் நிகழ்த்தக்கூட இயலாத நிலையை ஏற்படுத்தியது யார்? அதே ஜெயலலிதாதானே! 'பிரபாகரனைக் கைது செய்து, அழைத்து வந்து தண்டிக்க வேண்டும்� என்று சொன்னதும் ஜெயலலிதாதானே?
தேர்தல் நெருக்கத்தில் அரசியல் சுயலாபத்துக் காக, 'நான் தனி ஈழத்தை ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை ஆதரிக்கிறேன்!� என்றெல்லாம் சொல்கிறார். இத்தனை வருடங்களாக 'அழிக்க வேண்டும்... ஒழிக்க வேண்டும்!� என்று சொன்னவர், ஒரே இரவில் எப்படி மாறினார்? தி.மு.க. மீது கல்லெறியும் முன், ஒரு நிமிடம் நாம் யாரைத் தலையில் தூக்கிவைத்து ஆடுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவை எதிர்க்க இங்கே யாருக்கும் துணிச்சல் இல்லை. அதுதான் உண்மை!''



Geen opmerkingen:

Een reactie posten