தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

பிரித்தானிய வீசா விண்ணப்ப நடைமுறைகளில் மாற்றம்!


இலங்கையின் தலைநகரில் குப்பை அள்ளும் அமெரிக்கத் தூதர்
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 01:58.38 AM GMT ]
கொழும்பில் காலிமுகத்திடல் கடற்கரையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட உலக பூமி தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க தூதரகம் ஈடுபட்டது.
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்,  தூதரகப் பணியாளர்களுடன் இணைந்து காலிமுகத்திடல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

பிரித்தானிய வீசா விண்ணப்ப நடைமுறைகளில் மாற்றம்
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 01:26.16 AM GMT ]
எதிர்வரும் மே ஆறாம் திகதி முதல் ஐக்கிய இராச்சியத்துக்கான வீசா விண்ணப்ப முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் கொழும்பு உயர்ஸ்தானிகரகத்தின் இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 6ம் திகதி முதல் ஐக்கிய இராச்சியத்துக்கு செல்ல வேண்டிய வீசா விண்ணப்பங்களை இணையத்தளத்திலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இணைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள புள்ளி அடிப்படையிலான இந்த விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதன் பிரதியை ஐக்கிய இராச்சியத்தின் வீசா மத்திய நிலையம் ஒன்றில் கையளிக்க முடியும்.
இதற்கு https://apply.ukba.homeoffice.gov.uk/iapply.portal என்ற இணைய முகவரிக்கு பிரவேசிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகளின் தாமத நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten