[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 05:32.31 AM GMT ]
அத்துடன் கடத்தலுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்திருப்பதாக பதுளை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன் என்று ஏசி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர்.
கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட மேற்படி வர்த்தகர் ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கும் கொழும்பிலுள்ள பொலிஸ் பயிற்சி முகாம் அதிகாரி ஒருவருக்கும் கடத்தலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஹாலி-எலை, மஹவத்தை எனுமிடத்தைச் சேர்ந்த 22, 28 மற்றும் 29 வயதுடைய மேலும் மூவர் இந்த கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு பேலியகொடைக்கு மரண வீடொன்றுக்குச் சென்ற மேற்படி இரும்பு வியாபாரியான வர்த்தகர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட வர்த்தகர் ஹாலி-எலை, ஹுணுகலை எனுமிடத்தில் பாழடைந்த வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் வர்த்தகரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய கடத்தல்காரர்கள் கணவரை விடுவிக்க வேண்டுமானால் ஒன்றரை கோடி ரூபா ரொக்கமாகத் தருமாறு கோரியுள்ளனர்.
அந்தளவு பெரிய தொகை தம்மிடம் இல்லையெனத் தெரிவித்த வர்த்தகரின் மனைவியிடம் 10 இலட்சம் ரூபா கடத்தல்காரர்களால் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்து எட்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலை ஒன்று வர்த்தகரின் மனைவியால் கடத்தல்காரர்களுக்கு நுகேகொடையில் வைத்து வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடத்தலின் பிரதான தந்திரதாரிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எம். லத்தீப் தெரிவித்துள்ளார்.
எங்கள் காணியை அபகரித்த நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள்! போராட்டத்தில் மண் அள்ளி தூற்றிய தாய்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 06:41.26 AM GMT ]
வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளித்தார்.
மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர்.
அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு ஏசினார்.
நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன் என்று அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
Geen opmerkingen:
Een reactie posten