தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013

ஓடும் ரயில் முன் பாய்ந்து தமிழர் ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு, கொம்பனித்தெருவில் சம்பவம்


சம்பளம் கேட்டமைக்காக கொதிக்கும் எண்ணெயை ஊற்றினர்! இலங்கை தமிழ் பணிப்பெண்ணுக்கு சவூதியில் கொடூரம்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 12:23.49 AM GMT ]
சம்பளம் கேட்டமைக்காக கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு கையில் படுகாயங்களுடன் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைப் பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
புத்தளம் பாலாவி பகுதியைச் சேர்ந்த லட்சுமி (38) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறான கையில் எரிகாயங்களுடன் நாடு திரும்பியவராவார்.
கணவனை இழந்த நிலையில் மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் புத்தளம் மதுரங்குழியிலுள்ள முகவர் நிலையமொன்றினூடாக இப்பெண் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
வேலைக்குச் சென்ற முதல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே இவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் சம்பளம் வழங்கப்படவில்லை.
வீட்டில் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு மாதாந்தம் பணம் அனுப்ப வேண்டுமென்பதால் இப்பெண் தனது எஜமானிடம் சம்பளப் பணத்தைக் கோரிய போதும், மாதாந்தம் தர அவர் மறுத்துள்ளார்.
நாட்டை விட்டுச் செல்லும் போது மாத்திரமே சம்பளத்தை தரமுடியும். அதைவிடுத்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் கேட்டால் அடித்துக் கொலை செய்து விடுவோம் என அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ஒருநாள் இப்பெண் வீட்டுக்கு அனுப்ப சம்பளம் வேண்டுமெனக் கேட்டபோதே அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து இப்பெண்ணின் வலது கையில் ஊற்றியுள்ளார்.
தான் பணிபுரிந்த வீட்டிலிருந்து தப்பி வந்த மேற்படி பெண் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தூதரகத்தின் உதவியுடன் கடந்த 21ம் திகதி இலங்கை வந்தடைந்த இவர் சிலாபம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டமையினால் வலது கையில் நரம்பு பாதிக்கப்பட்ட நிலையில் இவரால் அந்த கையினால் எதுவும் செய்ய இயலாதுள்ளது.
தனக்கு நேர்ந்த அவலம் குறித்து இப்பெண் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சிலாபம் கிளைக்கு நேரில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
ஓடும் ரயில் முன் பாய்ந்து தமிழர் ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு, கொம்பனித்தெருவில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 12:34.35 AM GMT ]
ஓடும் ரயிலில் பாய்ந்து தமிழர் ஒருவர் கொழும்பு கொம்பனித் தெருவில் உயிரிழந்துள்ளார்.
கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவ நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலிலேயே இவர் மோதியுள்ளார்.
வத்தளை - ஹெந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய குமாரசாமி துஷ்யந்த குமார் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten