தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

வெனிசுலா செல்ல முயன்ற இலங்கை அமைச்சர் அமெரிக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்!


கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களிடம், தமிழ்நாடு பொலிஸ் கியூ பிரிவினர் விசாரணை
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 08:45.29 AM GMT ]
அண்மையில் கேரளாவில் கைது செய்யப்பட்ட 10 இலங்கையர்களிடம் தமிழ்நாடு பொலிஸ் கியூ பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கேரளா பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிக்கையில் இவர்கள் கேரள பொலிஸாரால் கைது செய்யப்ட்டனர்.
இந்தநிலையில் தமிழக அகதி முகாம்களில் பதிவுப் பெற்றுள்ள இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புக் கொண்டிருக்கிறார்களா? என்பதை அறிந்துக் கொள்ளவே தமிழக கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெனிசுலா செல்ல முயன்ற இலங்கை அமைச்சர் அமெரிக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்!
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 09:38.18 AM GMT ]
மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற  இலங்கை அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த இலங்கை அமைச்சர் ஒருவருக்கு, வெனிசுலா தலைநகர் கராகஸ் செல்லும்படி கொழும்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.
வெனிசுலா அதிபராக நிக்கலஸ் மடுரோ பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை அரசின் பிரதிநிதியாக பங்கேற்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
வெனிசுலா அதிபர் சாவேசின் மரணத்தை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் இவர் அதிபராகத் தெரிவாகியிருந்தார்.
கோர்ட், ரையுடன் இலங்கை அமைச்சர் வெனிசுலா செல்வதற்காக மியாமி அனைத்துலக விமான நிலையம் சென்றார்.
அவரிடம் நுழைவிசைவு ஏதும் இருக்கவில்லை, நியுயோர்க்கில் உள்ள ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தினால் வழங்கப்பட்ட கடிதம் மாத்திரமே இருந்தது.
விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க அதிகாரிகள், முறையான நுழைவிசைவு இல்லாமல், விமானத்தில் ஏற இலங்கை அமைச்சரை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து,  இலங்கை அமைச்சர் அமெரிக்க அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட, விமான நிலையத்தில் இருந்த பெருமளவானோர் அதைப் பார்க்க கூடிவிட்டனர்.
இதனால், சங்கடப்பட்ட இலங்கை அமைச்சர், வெனிசுலா செல்லும் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்று விட்டார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten