இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தயா மாஸ்டர் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் சரத் பொன்சேகா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தயா மாஸ்டர் ஓர் பயங்கரவாதத் தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் அரசாங்கம் தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்காது, அரசாங்கம் அவர்களை பாதுகாத்து வருவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் புலிகளின் தலைவர்களான பிள்ளையான், கருணா ஆகியோருக்கு அரசியல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், தற்போது தயா மாஸ்டருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் சில காலங்களில் குமரன் பத்மநாதனுக்கும் அரசியலில் களமிறங்க அரசாங்கம் வழியமைக்கும் அல்லது தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten