தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது: முஜிபுர் ரஹ்மான்!


கருத்தடை ஊசி மருந்துகளை கடத்த முயன்ற பாகிஸ்தான் பிரஜைக்கு வலைவீச்சு
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:26.06 PM GMT ]
கிழங்கு வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் பெட்டியில் சட்டவிரோதமான முறையில் கருத்தடை ஊசி குப்பிகளை கடத்த முயன்ற பாகிஸ்தானியர் தேடப்பட்டு வருகிறார்.
குறித்த சந்தேக நபர் சுமார் 30 ஆயிரம் ஊசி மருந்து குப்பிகளை இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளார். அவர் ஏற்கனவே தங்கியிருந்ததாக கூறப்படும் 3 இடங்களில் இன்று சுங்க அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தியிருந்தனர்.
எனினும், அவர் கைது செய்யப்படாத நிலையில், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்குமாறு சுங்க அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை கோரியுள்ளது.
குறித்த பாகிஸ்தானிய பிரஜையின் முன்னிலையில், சுங்க அதிகாரிகளினால் இரண்டு கொள்கலன்கள் பரிசோதிக்கப்படும் போது, குறித்த பாக்கிஸ்தானிய நபர் சமூகம் அளித்திருந்த போதிலும், மூன்றாவது கொள்கலனை பரிசோதிக்க ஆரம்பித்த போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த வகையான கருத்தடை ஊசி மருந்துகள் ஒரு குறிப்பிட்ட வெப்ப தட்ப நிலையில் பேணப்பட வேண்டும் என ஒளடத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதனை கிழங்குகளுடன் வைக்கும் போது அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சபையின் பணிப்பாளர் ஹேமந்த பனரகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அப்படியான ஊசி மருந்து பாவனைக்கு உட்படுத்தப்படும் போது, அது பக்க விளைவினை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி-

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது: முஜிபுர் ரஹ்மான்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 04:17.30 PM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால் தான் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும், அரசிலுள்ள அமைச்சர்கள் தேர்தலை நடத்த வேண்டாமெனவும் கூறுகின்றார்கள் எனவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடுத்துவதற்கு அஞ்சுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று கூறுகின்றார்.
இந்நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென கூறுகின்றனர்.
அரசுக்குத் தெரியும் தன்னால் வடக்குத் தேர்தலில் வெற்றிபெற முடியாதென்று. அதனால் தான் இவ்வாறான நாடகங்கள் அரசாங்கத்தினுள் இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் அரசாங்கம் தான்.
வடக்கில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. சிவில் நிர்வாகம் என்பது கிடையாது.
எனவே வட மாகாண சபைத் தேர்தலை குழப்புவதில் அமைச்சர்களே மும்முரமாகவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten