இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம் தெரிவிப்பு!
இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சீனா வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அறிவித்துள்ளது.இலங்கைக் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
சீனாவின் முக்கிய படையதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு கூடுதலான இராணுவ உதவிகளை வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
துமிந்த சில்வாவின் விடுதலை நீதித்துறைக்கு அச்சுறுத்தல்!- ஹிருனிக்கா
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலையானது, இலங்கையில் நீதித்துறை பிழையாக வழிநடத்தப்படுகின்றமைக்கான சான்றாக அமைந்துள்ளது என்று கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் நடைமுறை அரசாங்கத்தின் சட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே துமிந்த சில்வாவினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமது தந்தையான பாரத லக்ஸ்மனின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் துமிந்த சில்வாவின் விடுதலை மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஹிருனிக்கா குறிப்பிட்டுள்ளார்.
சட்டக்கல்லூரியின் மாணவி என்ற நிலையில் இது நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தலான விடயம் என்றும் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இன்னும் துமிந்த சில்வா, முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்பட்டது.
எனினும் பாரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட துமிந்த சில்வா நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது அவர் பழைய உருவத்தில் எவ்வித மாற்றங்களையும் காணமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten