இலங்கையிடம் இந்தியா கெஞ்சல்!
இந்திய மீனவர்களை தயவுசெஞ்சு சுடாதீங்க
சுடாதீங்க: இலங்கை கடற்படையிடம் இந்தியா கெஞ்சல்!
(நன்றி- தினமலர் )
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013,23:45 IST
மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 23,2013,09:54 IST
புதுடில்லி:"இந்தியா - இலங்கை இடையேயான கடல் எல்லையில், சில நேரங்களில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது, மனிதாபிபமான முறையில் நடந்து கொள்ளுங்கள் என, இலங்கை அரசை, அவ்வப்போது வலியுறுத்தி வருகிறோம்' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.
லோக்சபாவில் நேற்று, கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் பதிலளித்த, அமைச்சர் அந்தோணி தெரிவித்ததாவது:இந்தியாவுக்
இந்த மாத துவக்கம் முதல், இப்போது வரை, 125 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. இதுபற்றி அறிந்த உடன், இலங்கை அரசை தொடர்பு கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை, இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.பாக் ஜலசந்தி பகுதியில், இந்திய கடற்படை, கடலோர காவல் படை கப்பல்கள், "ஆபரேஷன் தாஷா' என்ற பெயரில், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி வருகின்றன.இவ்வாறு, அந்தோணி தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten