தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை ஹோமரங்கடவல பம்புருகஸ்வௌ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தற்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பரிசோதகர் ருவான் ரத்நாயக்க, சார்ஜன்ட் மஹிந்தலால் மற்றும் கான்ஸ்டபிள் சுனில் பிரேமரட்ன ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை மேலதிக நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை ஹோமரங்கடவல பிரதேசத்தில் புலிகளின் செயற்பாடுகள் காணப்பட்ட காலத்தில் இந்தக் கொலைகள் இடம்பெற்றன.
புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபிகா குமாரி, லக்ஸ்மன் ஜயவர்தன மற்றும் சமரரட்ன ஆகியோரே சம்பவத்தில் கொலையுண்டவர்களாகும்.
Geen opmerkingen:
Een reactie posten