தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013

வட மாகாணசபை தேர்தல்! டக்ளஸ் தேவானந்தாவே ஆளும் கூட்டணியின் முதன்மை வேட்பாளர்!


மார்க்கம் நகரின் தன்னார்வ நிறுவன அங்கீகாரத்தைப் பெற்ற கனடிய மனிதவுரிமை மையம்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 02:43.39 AM GMT ]
ஈழத்தமிழர்களின் குரலாக கனடிய அரசியலரங்கில் அடையாளம் காணப்பட்ட கனடிய மனிதவுரிமை மையமானது மார்க்கம் நகரின் தன்னார்வ நிறுவனத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்று மேலும் ஒருபடி தனது சேவையை விஸ்தரித்துள்ளது.
கனடாவில் தைத் திங்களை தமிழர் மரபுரிமை மாதமாக முதன் முதலில் அறிவித்து ஏனைய மாநகரங்களும் தமிழர் மரபுரிமை மாதத்தை அங்கீகரிப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்த மார்க்கம் நகரசபையின் மற்றுமொரு நடவடிக்கையாக கனடிய மனிதவுரிமை மையத்திற்கான ஆதரவு அமைந்துள்ளது.
மார்க்கத்தின் தொழில் முனைவர்கள், பிரமுகர்கள் மற்றும் அரசியலாளர்கள் கலந்து கொள்ளும் மார்க்கம் நகரின் உத்தியோகபூர் வருடாந்த நன்கொடை இரவு நிகழ்வில் கனடிய மனிதவுரிமை மையம் இத் தகுதியைப் பெறுவதற்காக ஏற்பாடுகளை கனடியத் தமிழர்களின் மத்தியிலிருந்து தேசிய அரசியலிற்கு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்ற திரு. லோகன் கணபதி அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
கனடிய மனிதவுரிமை மையம் சார்பில் திரு. நாதன் தியா தலைமையில் கலந்து கொண்ட பல்லினத் தொண்டர்களை மார்க்கம் நகர முதல்வர், கனடிய அரசின் சார்பில் கலந்து கொண்ட செனட்டர் உள்ளிட்ட பலரும் அவர்களது சேவைகளிற்காக பாராட்டியதுடன் அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவம் கொடுத்தும் மதிப்பளித்தனர்.
சுமார் 1,000 விருந்தினர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் இவ்வாறு கௌரவிக்கப்பட்ட கனடிய மனிதவுரிமை மையம் எதிர்வரும் யூன் மாதம் 8ம் திகதி கனடாவின் முக்கிய அரசியலாளர்களுடன் இணைந்த மனிதவுரிமைக்கான இரவு ஒன்றுகூடலொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

வட மாகாணசபை தேர்தல்! டக்ளஸ் தேவானந்தாவே ஆளும் கூட்டணியின் முதன்மை வேட்பாளர்!
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 02:53.36 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தில் வெற்றி பெறுவதற்கு டக்ளஸ் தேவானந்தா நல்லதொரு வாய்ப்பைக் கொண்டுள்ளதால், அவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழு உத்தேசித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியுள்ளன.
டக்ளஸ் தேவானந்தாவை முதல்வர் பதவிக்கு நிறுத்துவதை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மத்திய குழுக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்றும், அரசாங்கத் தரப்புக்கு டக்ளஸ் தேவானந்தாவை முன்னிறுத்துவதற்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten