தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

கமாண்டோ சிப்பாய் ஒருவர் வழி நடத்தி வந்த கொள்ளை குழு கைது !


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவர், இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவரது பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றிய கமாண்டோ சிப்பாய் ஒருவர் வழி நடத்தி வந்த கொள்ளை குழுவொன்றை பேலியகொட விசேட பணியகம் மற்றும் தீர்க்கப்படாத குற்றங்கள் பிரிவினர் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இந்த சிப்பாய், ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தங்காலையில் பணியாற்றும் உதவி காவற்துறை அத்தியட்சகருக்கு சொந்தமான வத்தளை பிரதேசத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்த இந்த சிப்பாய் அங்கிருந்து 10 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பூகொட பிரதேசத்தில் வசித்து வந்த டோல்டன் என அழைக்கப்படும் இந்த சிப்பாய், இதற்கு முன்னர், மகரகம, கமபஹா, வத்தளை, கந்தானை, மிரிஹான உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல கோடி ரூபா பெறுமதியான கொள்ளை சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக குறித்த பிரதேச காவற்துறை நிலையங்களும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. இவர் சிங்கள மக்களுக்கு எதிராகக் கொள்ளையடித்த காரணத்தால் மாட்டிக்கொண்டார். ஆனால் இவரைப் போல பலர் தமிழ் மக்களிடையே கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது பொலிசார் கண் வைப்பதே இல்லை !

Geen opmerkingen:

Een reactie posten