தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

யாழ். ஆனைக்கோட்டையிலும் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் அபகரிப்பு!


நைஜீரியாவில் கொள்கலன் தாங்கிக் கப்பலின் இலங்கை மாலுமிகள் கடற்கொள்ளையர்களால் கடத்தல்!
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:40.22 PM GMT ]
நைஜீரியாவுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் தாங்கிக் கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கப்பலில் நுழைந்த கடற்கொள்ளையர் 5 மாலுமிகளையும் கப்பலில் இருந்த பெருந்தொகையான பணத்தினையும் கைப்பற்றிய நிலையில், தப்பிச் சென்றுள்ளனர்.
அன்டிகுவா மற்றும் பாப்புடா கொடிகளின் கீழ் தொழிற்படும் ‘சிற்றி ஒப் சியாமின்’ கடந்த 25ம் திகதி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூவர் இலங்கை மாலுமிகள் என்பதுடன் ஏனைய இருவரும் ரஷ்யா மற்றும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கப்பலை கைப்பற்றுவதற்கு முதல் நாளான 24 ம் திகதியும் அதே பிராந்தியத்தில் கொள்ளையர்கள் கப்பலை கொள்ளையிட முனைந்தனர்.
இருப்பினும் அந்த கப்பல் வேகத்தை அதிகரித்தனை அடுத்து கொள்ளையர்களின் முயற்சி கைகூடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆபிரிக்காவின் கிழக்கு கரையோர பகுதியில் சோமாலியக் கொள்ளையரின் நடவடிக்கைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வெளிநாட்டு கடற்படைகள் மேற்கொள்ளும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களால் வழங்கப்படும் பாதுகாப்பே முக்கிய காரணம் என்று வர்த்தக கப்பல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ். ஆனைக்கோட்டையிலும் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் அபகரிப்பு!
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 03:40.39 PM GMT ]
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை கூழாவடியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகள் இராணுவத்தினரால் பறிக்கப்படவுள்ளன.
ஒரு ஏக்கர் 31 பேர்ச் அளவுள்ள கோடிக்கணக்கான பெறுமதியான 6 குடியிருப்பு வீடுகள் அடங்கலான காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பு அதிகாரி ஏ.சிவசுவாமி கையெழுத்திட்டு இந்தத் துண்டுப் பிரசுரம் ஆனைக்கோட்டை உப தபாலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten