[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 05:13.44 PM GMT ]
அமெரிக்காவில் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு மே 15 - 18 வரை இடம்பெறவிருக்கின்ற நிலையில் மாநாட்டுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
கனடாவில் தமிழீழ சுதந்திர சாசன பணிகளை கவனிப்பதற்காக பணிமனை ஒன்று 1235 ellesmere road, toronto, ontario M1P 2X8. Main intersection is Brimly and Ellesmere எனும் முகவரியில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் உலகத் தமிழர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யும் பொருட்டு 101 205 689 3354 எனும் அனைத்துலக தொலைபேசி இலக்கம் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சகிதம் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் மாநாடு இடம்பெறும் மண்டபத்துக்கு சென்று முன்னேற்பாடுகளை கவனித்துள்ளனர்.
இதேவேளை தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம் மற்றும் மாநாடு குறித்து பகுதியில் New Jersey - US ஆலோசனை கூட்டமொன்று இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
மட்டு. பெரியகல்லாறில் புதிதாக முளைத்துள்ள புத்ததூபி
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 05:01.31 PM GMT ]
தற்போது இந்த பொலிஸ் சோதனைச் சாவடி தற்போது கோட்டைக் கல்லாறு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
பெரிய கல்லாறு கிராமத்திலிருந்த பௌத்த தூபி பொலிசாரால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டைக்கல்லாறு சோதனைச்சாவடி அருகில் புதிய மேலுமொரு பௌத்த தூபி ஒன்று நிர்மாணிப்பதற்கு பொலிசார் முனைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten