தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

ரணிலின் குற்றச்சாட்டுகளை யாழ். இராணுவத் தளபதி ஹத்துருசிங்க நிராகரிப்பு!!


எதற்காக இலங்கை செல்கிறார் ஜப்பானின் பிரதிப் பிரதமர்?
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 08:05.37 PM GMT ]
ஜப்பானின் பிரதிப் பிரதமர் டாரா அசோ இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளர் எனவும். எதிர்வரும் 1ம், 2ம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போது விடுக்க்பபட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜப்பானின் சிரேஸ்ட துணை நிதி அமைச்சர் யோகோ ஒப்புயுச்சியும், பிரதிப் பிரதமர் அசோவுடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் துறைமுகத்தை ஜப்பான் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுக அபிவிருத்திக்காக ஜப்பான் இலங்கைக்கு 80 பில்லியன் யென்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் குற்றச்சாட்டுகளை யாழ். இராணுவத் தளபதி ஹத்துருசிங்க நிராகரிப்பு
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 01:00.23 AM GMT ]
யாழ். நகரில் உதயன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியது இராணுவமே என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதை யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நிராகரித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வட பகுதி மக்கள் வாழ்ந்த போது அங்கு மக்கள் பட்ட கஷ்டங்களை அறியாத அவர், தற்போது மக்களுக்காக பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் இராணுவம் மீது வீண் பழி சுமத்துவது கவலையளிக்கிறது.
அவர் இப்படி கூறியிருக்கக் கூடாது.
உதயன் பத்திரிகை தீப்பிடித்த சம்பவத்தை இன்று சிலர் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அலுவலகத்தை தாக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லை.
வடபகுதியில், இராணுவத்தின் பிரசன்னத்தை இன்று வெகுவாக குறைத்திருக்கிறோம்.
யாழ் உதயன் அலுவலகம் மீதான  தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை செய்து வருகின்றனர்.
விரைவில் உண்மை நிலை புலப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten