தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சிவில் ஆளுநர், சர்வதேச கண்காணிப்பாளர் வேண்டும்!- ரணில் கோரிக்கை


யாழ். சுன்னாகம் பகுதியில் இரு யுவதிகளை காணவில்லை
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 08:14.10 AM GMT ]
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன யுவதிகளின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் வசிக்கும் 16 வயதான மாணவி ஒருவர் விட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் திரும்பி வரவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சுன்னாகம்-காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 26 வயதான யுவதியொருவர் தான் வீட்டில் இருந்து சுகயீனம் காரணமாக வெளியேறுவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவரும் வீடு திரும்பவில்லையென கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காணமால் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சிவில் ஆளுநர், சர்வதேச கண்காணிப்பாளர் வேண்டும்!- ரணில் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 08:21.39 AM GMT ]
இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னராக சிவில் நபர் ஒருவரை வடக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரவிகருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, டி.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்,
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கே நான்கு நாள் விஜயமாக நாம் வடக்கிற்கு வந்துள்ளோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் செப்டம்பர் மாத்திற்குள் நடாத்த வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த அரசாங்கம் கடந்த முறை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரிலும் பல வாக்குதிகளை வழங்கியுள்ளது. அதில வடக்கு மாகாண சபைத் தேர்தலும் முக்கியமான ஒரு விடயமாக உள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னர் வடக்கு மாகாணத்தில் ஆளுநராக உள்ள இராணுவ அதிகாரியான சந்திரசிறியை மாற்ற வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அப்போது தான் சுதந்திரமான ஒரு தேர்தல் நடைபெறும் என்பதை உறுதிப் படுத்த முடியும். ஆளுநர் சந்திரசிறிக்கு பதிலாக வடக்கிலும் தெற்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் பிரதிநிதியொருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னராக சர்வதேச கண்காணிப்பாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இதன் பின்னர் தேர்தலில் ஏற்படும் முடிவுகளை நாம் ஏற்கத் தயாராக உள்ளோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten