யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான ஆயுதக் குழுவொன்று செயற்படுவதாகவும் அவ்வாறானதொரு குழுவே உதயன் அலுவலகத்துக்கு தீ வைத்திருக்க முடியும் என்றும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனரல என்ற இந்தச் சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். உதயன் பத்திரிகை அலுவலகம் தீவைக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மேலும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்களைப் வைத்திருக்கும் அதிகாரம் பொலிஸாருக்கும் ஏனைய முப்படையினருக்குமே உள்ளது.
ஆனால், யாழ்ப்பாணத்தில் ஆயுதக் குழுவொன்று இயங்குகிறது. உதயன் பத்திரிகை மீதான தாக்குதலையும் இவர்களே நடத்தியிருக்கலாம். அவ்வாறான தகவல்கள் இருந்தால் யாரும் தந்து உதவலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten