ரணிலுடனான சந்திப்பில் மன்னார் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது!- மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:14.21 PM GMT ]
எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.
பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள்.
அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ. செபமாலை கருத்துத் தெரிவிக்கையில்,
தாம் காணிகள் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரிடம் முறையிட்டதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மன்னாரில் காணாமல் போன 472 பேரின் பட்டியலை அவரிடம் கொடுத்து அவை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சி தலைவரைக் கோரியதாகவும் கூறினார்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவரோ அவை குறித்து எந்த விதமான பதில் கருத்தும் கூறவில்லை என்றும் மாகாணசபைத் தேர்தல் போன்ற விடயங்கள் குறித்தே பேசியதாகவும் அவர் கூறினார்.
இதனால் தமது மாவட்ட மக்களுக்கு அவருடனான அந்தச் சந்திப்பினால் எந்தவிதமான பலனும் கிடையாது என்றே தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:41.42 PM GMT ]
வவுனியா நகர சபையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில தீயில் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தகமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த நிலையில் பதிவேட்டுப் புத்தகத்தின் சில பகுதிகள் மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரசபை உறுப்பினர் ஒருவரை நகரசபையில் இருந்து இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் நகரசபை நிர்வாகத்தாலும் சில நகரசபை உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில அவ் உறுப்பினர் ஒழுங்காக கூட்டங்களுக்கு வருவதில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தக ஆவணமே எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரசபைத் தலைவர் ஜ.கனகையா இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் அவர்களிடம் கோட்டபோது, இது
இதேவேளை, உண்மையான ஆவணங்கள் தான் எரிக்கப்பட்டவை என்று கண்டு பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர் சட்ட ரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten