[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 09:41.19 AM GMT ]
அடையாள அணி வகுப்புக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக் கிழமை முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் மாணிக்க கங்கை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த கைதிக்கு எதிராக நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதற்கமைய இக் கைதிக்கான அடையாள அணி வகுப்பொன்று இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இடம் பெற ஏற்பாடாயிருந்தது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியை இன்று சிறைச்சாலை இருந்து நீதிமன்றுக்கு கொண்டு சென்ற வேளை தப்பி ஓடியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இக் கைதிக்கு நான்கு வழக்குகள் தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்காக மூன்று அடையாள அணி வகுப்புக்களும் பதிவாகியிருந்தன.
இவற்றில் ஒரு அடையாள அணி வகுப்பு இன்று ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றத்தில் நீதிபதி த.கருணாகரன் முன்னிலையில் நடைபெறவிருந்த வேளையில் இக் கைதி தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற கைதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பயனளிக்கவில்லை.
மாணிக்க கங்கை வளாகத்தில் இனந்தெரியாதவரின் சடலம் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 09:48.57 AM GMT ]
மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்திருக்கலாம் என கதிர்காம பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாணிக்க கங்கை அமைந்துள்ள வனப் பகுதியில் இவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten