தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை !


இலங்கையின் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க திசாநாயக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப் பிரேரணையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்மன் கிரியெல்ல, தயாசிறி ஜயசேகர, அகில விராஜ் காரியவசம், ரஞ்சன் ராமநாயக்க, சந்திரனி பண்டார மற்றும் ஆர்.யோகராஜன் உட்பட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த சம்பிக்க ரணவக்கவினால் நிராகரிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமுல்படுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த சர்ச்சை தொடர்பாக அமைச்சர் சம்பிக்க அமைச்சர் பவித்ராவிற்கு எதிராக சவால் விடுத்துள்ளார் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten