தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

கொலைக் குற்றவாளிக்கு சலியூட் அடித்த பொலிஸ் உயரதிகாரி !


2011ம் ஆண்டு அங்கொடையில் வைத்து நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்டார். அவரது 2 மெய்ப்பாதுகாப்பாளர்களும் கொலைசெய்யப்பட்டார்கள். இத் துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் துமிந்த சிலவாவும் காயமடைந்தார். இருப்பினும் அவரே முதல் முதலாக துப்பாக்கியை எடுத்து லக்ஷ்மன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என நேரில் பார்த்த பல சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். துமிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் கொலைக்குற்ற வழக்கு விசாரணையிலும் உள்ளது. இன் நிலை அவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் அலுவலகத்தில் இருந்தவேளை அங்கே சென்ற பொலிஸ் உயரதிகாரி ஒருவர் துமிந்தவுக்கு சலியூட் அடித்துள்ளார். இப் புகைப்படத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு கொலைக் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு, பொலிஸ் உயரதிகாரி எவ்வாறு சலியூட் அடிக்கலாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எது எவ்வாறு இருப்பினும் துமிந்த சில்வா மகிந்தரின் நெருங்கிய கூட்டாளி என்பது யாவரும் அறிந்த விடையம். அதனால் தான் என்னவோ பொலிஸ் அதிகாரியும் சலியூட் அடித்துவிட்டார் போல !


Geen opmerkingen:

Een reactie posten