தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013


இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றால் 40 எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய வேண்டும்!- பாஜக
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 12:52.47 AM GMT ]
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது.
பொதுநலவாய (கொமன்வெல்த்) நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கையில்  பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை – சந்திரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 02:03.19 AM GMT ]
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகள் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், இதில் எவ்வித உண்மையுமில்லை.
சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன,மத,குல பேதங்களை களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செல்வந்தர்கள் மத்தியில் செல்வந்தராக திகழ்வதற்கு சிலருக்கே வாய்ப்பு கிட்டும்.
அவ்வாறான செல்வந்தர்களில் ஒருவராக ஜகத் பின்னகொடவிதானவை கருதுகின்றேன்.
ஆசியாவின் மிக உயர்ந்த பௌத்த சிலையை அமைப்பதற்கு பின்னகொடவிதான முயற்சி எடுத்து வருகின்றார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்படும்.
சிலை செதுக்குவது மிகவும் கடினமான ஓர் கலையாகும், சில அரசியல் தலைவர்களின் சிலைகள் எவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன என்பதனை அவதானித்தால் இந்த உண்மை தெரிய வரும் என சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten