தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

காணி சுவீகரிப்பை எதிர்த்து வலி.வடக்கு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! கைது செய்வோம் என சுரேஸ் எம்.பிக்கு பொலிஸார் எச்சரிக்கை!!


இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை! ஹிருனிகா - இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:11.37 AM GMT ]
இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
நடக்கும் எல்லா விடயங்கள் பற்றியும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
துமிந்த சில்வா தொடர்பில் தீர்மானிக்கும் ஆற்றல் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
நான்கு குடும்பங்களைச் சீரழித்த துமிந்த சில்வா, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றுக்கொள்ள சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நியாயம கோர உள்ளதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச
இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம் வெளிநாட்டுக்கு வேறு முகத்தை காட்டி வருகின்றது.
போர் வெற்றி குறித்த பிரச்சாரங்களைத் தவிர நாட்டி வேறு எந்த அபிவிருத்தியும் கிடையாது.
நாட்டின் அபிவிருத்தியை சோடா போத்தல் அபிவிருத்தியாக அடையாளப்படுத்த முடியும்.
மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அரசாங்கம் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


காணி சுவீகரிப்பை எதிர்த்து வலி.வடக்கு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! கைது செய்வோம் என சுரேஸ் எம்.பிக்கு பொலிஸார் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 07:14.04 AM GMT ]
அரசாங்கத்தினால் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரி, தமிழ் மக்கள் தேசிய முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் பாஸ்கரா உட்பட வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுன்னாகம் மதவடியில் இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பிரதேச செயலகம் வரையான பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 11.00 மணியளவில் ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ் காவலையும் மீறி பிரதேச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றனர். எனினும் பொலிஸார் வாசலில் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை வீதி வழியாக தமது காணிகளுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி உயர் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
கைது செய்வோம் என சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு பொலிஸார் எச்சரிக்கை
ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றால் கைது செய்வேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இன்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது பொலிஸார் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 7.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் திரண்டு வீதிக்கு குறுக்காக வந்து காங்கேசன்துறை வீதியூடாக நடந்து சென்றனர் அங்கு வந்த பொலிஸார் இவ்வாறு நடந்து சென்றால் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சுரேஸ் எம்பி கைது செய்ய இயலும் என்றால் கைது செய்யும் என்று பதிலளித்தார். தொடர்ந்து வீதியில் மக்கள் ஒன்று கூடி அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten