இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அந்த நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்ததாகி விடும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், அங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் மாநாடு நடத்தப்பட்டால், காமன்வெல்த் அமைப்பு சர்வதேச நாடுகளின் ஏளனத்திற்கு ஆளாக நேரிடும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நாளை, கொமன்வெல்த் அமைச்சர்கள் செயலக கூட்டம் கூடி விவாதிக்க உள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட்டால் அதனை புறக்கணிக்கப்போவதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சனல் 4 வெளியிட்டுள்ள கொலைக் களங்கள் ஆவணப்பட தயாரிப்பாளரான காலம் மக்ரே அவர்கள், கொமன்வெலத் நாடுகளின் தற்போதைய தலைவராக கமலேஷ் ஷர்மாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொமன்வெலத்தின் உச்சி மாநட்டை நடத்தவேண்டாம் என்றும், இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் மற்றும் பேஃஸ் புக் ஊடாக அவர் இன்று பாரிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என அறியப்படுகிறது.
கொமன்வெலத் நாடுகளின் தலைவர் பதவி சுழற்சி முறையில் மாற்றப்படுவது வழக்கம். அதன் தற்போதைய தலைவராக இந்திய இனத்தவரான கமலேஷ் ஷர்மா அவர்களே உள்ளார். அவரது மின்னஞ்சலுக்கு(asksharma@commonwealth.int ) ஆயிரக்கணக்கான ஈமெயில்களை தமிழர்களும் மற்றும் வேற்றின மக்களும் அனுப்பவேண்டும் என்று காலம் மக்ரே அவர்கள் தனது டுட்டர் ஊடாகத் தெரிவித்துள்ளார். அதற்கான முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை லண்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பெரும் சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா போன்ற நாடுகள் இலங்கையில் கொமன்வெலத் மாநாட்டை நடத்த இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் பிரித்தானியா இன்னும் மெளனம் சாதித்து வருகிறது. இதனை கனடாவுடன் இணைந்து பிரித்தானியாவும் எதிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்க நாளை லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை சனல் 4 உட்பட சில சர்வதேச தொலைக்காட்சிகள் நேரடியா வீடியோ எடுத்து தனது செய்திகளில் இணைக்கவும் உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
நாளை வெள்ளிக்கிழமை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கொமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதா இல்லையா என்ற வராலாற்று சிறப்பு மிக்க கூட்டம் ஒன்று நாளை லண்டனில் நடைபெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கொமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதா இல்லையா என்ற வராலாற்று சிறப்பு மிக்க கூட்டம் ஒன்று நாளை லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்நேரத்தில் இலங்கையில் இம் மாநாட்டை நடத்தக்கூடாது என சில நாடுகள் கடும் எதிர்பு தெரிவிக்கவுள்ளது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையால்(BTF) இந்த ஆர்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இதில் மக்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என தமிழர் பேரவை கேட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நாளை முற்பகல் 11 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Commonwealth Secretariat, Marlborough House, PallMall, London SW1Y 5HX என்னும் முகவரியில் நடைபெறவுள்ளதாகவும், அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten