தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

வரம்பு மீறிச் செயற்படுகின்றாராம் அமெரிக்கத் தூதர்!


அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும்-ஜனாதிபதி


அமைச்சர்களுக்கு இடையில் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் அமைச்சர்களுக்கு இடையில் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்க்கட்சிகள் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடும். அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு பாதகத்தன்மை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றார்.

http://www.jvpnews.com/srilanka/24682.html

வரம்பு மீறிச் செயற்படுகின்றாராம் அமெரிக்கத் தூதர்!


அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் வரம்பு மீறிச் செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வது வருவதாகத் தெரிவித்துள்ளது.
1961ம் ஆண்டு வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய இராஜதந்திரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கள முஸ்லிம் பதற்ற நிலமை குறித்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மிச்சல் சிசன் கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
திருகோணமலை சிங்கள மக்களினால் முஸ்லிம் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனரா என சிசன், கேள்வி எழுப்பியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten