இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு; அதிர்ச்சியும் கவலையும் தரும் முடிவு! கனடா
காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார்.
காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பு என்று பேட்டியில் குறிப்பிட்ட கனடிய அமைச்சர், இந்த விழுமியங்கள் அனைத்திலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்களும் மற்றும் அதிகரித்துவரும் தடயங்களும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் ஐநா மனித உரிமைகள் மன்றமும் இலங்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது
இலங்கை விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு அதிருப்தி அளிப்பதாக அந்நாட்டு கிறீன்ஸ் கட்சியின் தலைவி கிறிஸ்டீன் மைலீன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கை மனித உரிமை நிலைமைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை அவுஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு அரசியலுக்காக மனித உரிமை மீறல் விடங்களை கவனத்திற் கொள்ளாமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டு வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கண்மூடித்தனமாக செயற்படுகின்றது என்றே அர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திNலியா கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் வழியையே பின்பற்ற வேண்டுமென கிறிஸ்டின் மைலீன் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten