[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 02:02.16 AM GMT ]
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சமநிலை அற்றதாக இருப்பதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போர்ப்ஸ் சஞ்சிகைக்கு அவர் எழுதியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.
எனினும் மறுசீரமைப்பு விடயத்தில் ஏற்கனவே இலங்கை மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, பொருளாதார ரீதியாக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்ற அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்க மறுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈதலய மற்றும் கிந்த சிங்கள சஞ்சிகையின் ஆசிரியரின் வீட்டை காவற்றுறையினர் சோதனை
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 02:05.27 AM GMT ]
ஈதலய மற்றும் கிந்தர ஆகிய சிங்கள சஞ்சிகைகளின் பிரதான ஆசிரியர் சிரிலால் பிரியந்தவின் வீடு நேற்றைய தினம் காவற்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காவற்துறையினர் தம்மை கைது செய்யவே வந்ததாகவும், எனினும் பின்னர் தம்மிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டு, வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது அரசாங்க தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
காணாமல் போன காவற்துறை தலைமையகத்தின் சில முக்கிய ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் சிரிலால் தெரிவித்துள்ளார்.
எனினும் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் காவற்துறையினரால் எதனையும் கைப்பற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 02:08.33 AM GMT ]
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்று மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியது.
இதன் போது அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக மீது போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தொடர்ந்து பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten