தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

டுபாய் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம்: 19 தமிழர்களின் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது! 11 பேரை அமெரிக்கா உள்வாங்கியது!


மின்சாரக் கட்டண அதிகரிப்பு!- பாராளுமன்றத்தில் அமளி துமளி
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:47.44 PM GMT ]
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்க்கட்சியினர் நடத்திய மெழுகுவர்த்திப் போராட்டத்தின் மீது ஆளும் கட்சியினர் தண்ணீர்ப் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பாராளுமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
இதன்போது சபையில் பதற்ற நிலை நிலவியதுடன் அவ்விடம் கலவர பூமியாக காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன், அவர்கள் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
உறுப்பினர்கள் சிலர் மேசையின் மீது ஏறி நின்று கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சபையில் 4 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மே மாதம் 7ம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


டுபாய் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம்: 19 தமிழர்களின் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது! 11 பேரை அமெரிக்கா உள்வாங்கியது!
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 10:49.02 AM GMT ]
டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஈழத்தமிழ் அகதிகளில் 19 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்ற நிலையில் தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தஞ்சடைந்திருந்த 19 பேர் தவிர 11 பேர்  கடந்த 24ம் திகதி (23-04-2013) அமெரிக்காவினால் உள்வாங்கப்பட்டுள்ளனர் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்றேலியா நோக்கி கடல்வழிப்பயணமாக சென்று கொண்டிருந்த வேளை பயணம் செய்த கப்பலில் ஏற்பட்ட உடைவு காரணமாக சிங்கப்பூரினை அண்டிய நடுகடல்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 46 ஈழத்தமிழர்கள் டுபாய் நாட்டு கப்பலொன்றினால் காப்பாற்றப்பட்டு டுபாய்க்கு கரை சேர்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 46 பேரில் அறுவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் 19 பேரின் நாடுகடத்தல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களது அழுத்தங்களுக்கு அமைய நாடுகடத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட ஒரு தொகுதி தமிழர்களை அமெரிக்கா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில் பிறதொகுதி தமிழர்களை ஏற்றுக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசாமி அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தற்போது டுபாயில் தஞ்சங்கொண்டுள்ள தமிழர்கள் தகரக் கொட்டகைகளில் இருந்து ஓரளவு வசதியான இடங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அவர்களது சுதந்திரமான நடமாட்டத்தினை உறுதி செய்யும் பொருட்டு இறுக்கமான கட்டுப்பாடுகளை டுபாய் காவல்துறையினர் தளர்த்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் என்று இனம்காணப்பட்டாலும் கூட  அவர்களது பின்னணியின் அடிப்படையில் மட்டுமே இவர்கள் அகதிகளாக காணப்படவேண்டும் என்றுஜக்கிய நாடுகள்சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் பரிந்துரை செய்திருந்தாலும் அப்படியானவர்கள் அரசியல் பலாத்காரத்தில்  ஈடுபட்டவர்கள் என்று காரணம் காட்டி அநேகநாடுகள் அவர்களுக்கு தஞ்சம் வழங்க தயங்குகின்றனர்.
தற்சமயம் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அந்தநாட்டினால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். ஆனால் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக நாட்டிற்குள் உட்புகுதல் தடைசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புமுகாம்களுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள் . இந்தோனசியா, மலேசியா, தாய்லாந்து,கம்போடியா, லாவோஸ் என பலநாடுகளில்இதேநிலைதான்நீடிக்கிறது.
இத்தகைய பின்னணியினைக் கொண்டுள்ள இப்பிரச்சனையினை தனித்துவமாக புரிந்து கொண்டே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரத்தினை கையாளுகின்றது.
இந்நிலையில் தமிழர் சமூகப்பரப்பில் உள்ள செய்தியூடகள் இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைகளையும்  அவர்கள் இருக்கும் பின்னணிகளையும் மனதில்கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் அனைவரது நோக்கமும் எமது உறவுகளது நலனில்பால் அக்கறை கொண்டது என்ற  பொதுநிலையில் எதிர்பாராத விளைவுகளை அந்த மக்களுக்கு தோற்றுவிக்கலாம் என்பதனை நாம் அனைவரும் மனதிற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் அறிக்கையில்நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் உறவுகளின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்ற விரும்புகின்றர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனோ அல்லது எமது அமைச்சகத்திடனோ தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten