தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

அவுஸ்.புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை: இராணுவம் !]


அவுஸ்திலேலியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துன்புறுத்தியதாகவும், கடுமையாக விசாரணை நடத்தியதாகவும் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகைப்படுத்திய பிரச்சாரங்களின் ஓர் கட்டமாக இதனை அவதானிப்பதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தி வருவதாகவும், இதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துன்புறுத்துவதாகத் தெரிவிப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் சில தரப்பினர் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஆயிரம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதனை நியாயப்படுத்தும் வகையில் இவ்வாறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நோக்கங்களுக்காகவே தற்போது அவுஸ்திரேலியா உள்ளிட்ட வேறும் நாடுகளில் புகலிடம் கோருவதாகவும் இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பியிருந்த போது துன்றுத்தப்பட்டதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குமார் என பெயரிடப்பட்ட நபர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், இராணுவப் புலானய்வுப் பிரிவினர் துன்பறுத்தியதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். நிர்வாணக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

உயிரிழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதாகவும், இறுதியில் தம்மை விடுதலை செய்தாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக ஒப்புக்கொள்ளுமாறு கோரி துன்புறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குள் மாணவர் வீசா அடிப்படையில் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2006ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பஸ் சாரதியாக கடயைமாற்றியதாகவும் பணம் பெற்றுக் கொண்டு புலிகளின் சில பொதிகளை கொழும்பிற்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை நடத்தியதனைத் அடுத்து அவுஸ்திரேலியாவிற்கு சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சமையல் கலை தொடர்பிலான கற்கை நெறியொன்றை கற்று, வீசா பெற்றுக் கொண்டதாகவும், மனைவி மற்றும் பிள்ளைகளையும் அவுஸ்திரேலியாவிற்கு வரவழைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமது மாமா ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டதாகவும் அவரை பார்வையிடுவதற்காக இலங்கை திரும்பியிருந்த போது, தம்மை கடத்தி இவ்வாறு இராணுவத்தினர் துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten