தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்!- பொப் கார்


தமிழர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் சூழலில் வைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்!- பா.உ சி.சிறீதரன்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 04:06.29 AM GMT ]
“தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுவதனால் அவர்களது வாழ்வாதாரத் தொழில்களும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன” என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த 24ம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தனர்.
இவ்விஜயத்தின் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் தமிழர்களின் வாழ்விடங்கள், பூர்வீகநிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, யாழ். வலிகாமம் பகுதியில் பொதுமக்களின் காணிகள் அபகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் தோட்டச்செய்கை மேற்கொள்ளும் 600 ஏக்கர் நிலம் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றமை, வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுகின்றமை குறித்தும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் மற்றும் இரணைதீவு ஆகிய பகுதிகள் இன்று வரைக்கும் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் இவ்வாறு தமிழர்கள் நிலங்கள் அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு அக்காணிகளில் வாழ வேண்டிய குடும்பங்களை வலுக்கட்டாயமாக சீனியா மோட்டை என்ற கிராமத்தில் குடியமர்த்தியுள்ளமை மற்றும் முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத் தொடுவாய் ஆகிய பகுதிகளில் மாரியாமுனை, கந்தசாமிமலை, இலந்தைமுனை, எரிந்காடு, சுவாந்தவெளி, கிடங்குமடுக்குடா, தாயடித்தமுறிப்பு, வண்ணாங்குளம், உறியடிக்குளம், தட்டமுனைக்குளம், சின்னக்குளம், முந்திரிகைக்குளம், மித்தகைகுளம், புளியமுனை வத்தாமடு, மணற்கேணி, சாம்பன்குளம் உள்ளிட்ட சுமார் 17இற்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக கிராமங்களிருந்து கடந்த 1983களின் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு இன்று இந்தக்கிராமங்களில் உள்ள பயிர்செய்கைக் காணிகள், சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு இன்று அவற்றுக்கான காணி உரிமங்களும் ஜனாதிபதியால் அண்மையிலேயே வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வரும் அதேவேளை, தமிழ் மக்களை ஒரு அச்சுறுத்தும் சூழலிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதிலும் அரசு குறியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்!- பொப் கார்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 08:12.16 AM GMT ]
இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப் போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்  பொப் கார் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களித்தாகவும், தற்போது அமர்வை புறக்கணிப்பதானது வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையை தனிமைப்படுத்துமெனவும்  பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் மற்றும் திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும்  பொப் கார் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten