இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள சிறுவர்களை. வட அவுஸ்ரேலியாவில் உள்ள கேர்ட்டின் முகாமில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அங்கு சிறுவர்கள் தங்களின் தாய்மாருடன் தடுத்து வைக்கப்படுவர். எனினும் இதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏனைய அகதிகளுடன் சிறுவர்களையும் தடுத்து வைக்கும் போது அவர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இந்த தீர்மானத்தை மாற்ற முடியாது என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten