தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் கருவியை கொள்வனவு செய்துள்ள புலனாய்வுப் பிரிவினர்


பொதுநலவாய மாநாடு! அவுஸ்திரேலியா, கனடாவின் வழியையே பின்பற்ற வேண்டும்!- கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 12:03.48 AM GMT ]
இலங்கை மனிதவுரிமைகள் மற்றும் வெளிவிவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு தமக்கு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள கிறீன்ஸ் கட்சி தலைவி கிறிஸ்டீன் மில்னே, அவுஸ்திரேலியா கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் வழியையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக இலங்கை மனித உரிமை நிலைமைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை அவுஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு அரசியலுக்காக மனித உரிமை மீறல் விடயங்களை கவனத்திற் கொள்ளாமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டு வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கண்மூடித்தனமாக செயற்படுகின்றது என்றே அர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் வழியையே பின்பற்ற வேண்டுமென கிறிஸ்டின் மில்னே வலியுறுத்தியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் கருவியை கொள்வனவு செய்துள்ள புலனாய்வுப் பிரிவினர்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 01:27.41 AM GMT ]
இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் கருவியை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கைத்தொலைபேசி மற்றும் பொருத்தப்பட்ட தொலைபேசிகளின் உரையாடல்களை எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அனுமதியின்றி பதிவுசெய்ய முடியும்.
இந்தநிலையில் இவ்வாறான கருவி கொள்வனவு மற்றும் பதிவு சட்டவிரோதமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது பொதுமக்கள் சுதந்திரத்தையும் தொலைத் தொடர்புகள் சட்டத்தையும் பாதிக்கும் செயல். எனவே அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யமுடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சஞ்சீவ கமகே தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmryERcNagsy.html


ஒட்டுக்கேட்க்கும் நவீன கருவிகளை ஸ்ரீலங்கா அரசு வாங்கியுள்ளது !
28 April, 2013 by admin
தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான நவீன கருவிகளை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கருவிகளின் மூலம் கைத்தொலைபேசி மற்றும் தரைவழித் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். கடந்த ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்தக் கருவிகளின் மூலம், எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தினதும் ஒத்துழைப்பு இல்லாமலேயே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும் என்று அறியப்படுகிறது.

எனினும், இந்த முறையின் மூலம் தொலைபேசிகளை ஒடடுக் கேட்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் சிறிலங்கா சட்டவாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கும், தனிநபர் உரிமைக்கும் முரணானது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க வேண்டுமென்றால் அதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட வேண்டும் என்று சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் பொதுச்செயலர் சஞ்சய கமகே மேலும் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten