தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

மூடப்பட்ட பாடசாலைகளுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?: பொன்.செல்வராசா கேள்வி!


'இலங்கையில் தற்போது ஒன்பதினாயிரம் பாடசாலைகள் உள்ளன. அவற்றுள் 224 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளில் 50 சதவீதமானவை வட மாகாணத்தினைச் சேர்ந்தவை.
அத்துடன், மட்டக்களப்பிலும் 11 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
'தற்போதைய கல்வி நிலையினைப் பார்க்கின்றபோது போட்டித்தன்மை காணப்படுகின்றது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இந்நாட்டில் போட்டி நிலைக்குரிய கல்வி என்பது சரிவராத ஒன்றாகும்' என்றம் செல்வராசா எம்.பி சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லறு கிராமத்தில் அமைந்துள்ள சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம் நடத்திய வருடாந்த பரிசழிப்பு விழாவும் 'செந்தூரம்' எனும் நூல் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பின் கல்வி நிலையில் மாற்றம் வேண்டுமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள் தோறும் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து பகுதிநேர கல்வியினை மாணவர்களுக்கு வழங்கிவர வேண்டும். அப்போதுதான் மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் சிறந்து விழங்கும். ஆனால் கடந்த காலங்களில் பகுதிநேர வகுப்புக்கள் ஏதும் இல்லாமலும் கூட மட்டக்களப்பு மக்கள் கல்வி கற்று வந்தார்கள் ஆனால் தற்போது பகுதிநேர வகுப்புகளுக்குரிய வசதி வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
பாடசாலைகள் மூடப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் மீள்குடியேற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை என்பதுதான். மட்டக்களப்பு மாநகரத்தில் அமைந்திருக்கின்ற பாடசாலையொன்றில் 14 பிள்ளைகள் உள்ளார்கள். இன்னுமொரு பாடசாலையில் 34 பிள்ளைகள் உள்ளார்கள். மற்றுமொரு பாடசாலையில் 12 பிள்ளைகள் உள்ளார்கள். மட்டக்களப்பின் இதயமான மட்டு. மாநகரத்திலேயுள்ள மூன்று பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தினை எட்டியுள்ளன.
மட்டு. மாநகரில் நிலை என்றால் படுவான்கரையினைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. படுவான்கரையிலே அமைந்திருக்கின்ற பூச்சிக்கூடு எனும் கிராமத்தில் உள்ள பாடசாலையில் 3 ஆசிரியர்கள் 14 மாணவர்கள் இவ்வாறுதான் மட்டக்களப்பின் கல்வி நிலை போய்க்கொண்டிருக்கின்றது.
பூச்சிக்கூடு கிராமத்தில் 450 குடும்பங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 150 குடும்பங்கள் மாத்திரம் உள்ளார்கள். ஏனெனில் மீள்குடியேற்றம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அரசாங்கத்திடம் கேட்டால் மீள்குடியேற்றம் பூர்த்தியாகிவிட்து எனக் கூறுகின்றது. ஆனால் இங்கு நடப்பது என்ன?
1990களில் அடித்து நொறுக்கப்பட்ட பழம்பெரும் தமிழ் கிராமங்கள் இன்றும் முறையான வசதிவாய்ப்புக்கள் ஏதுமின்றி மக்கள் திகைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறுதான் வடகிழக்கு மக்களின் கல்வி நிலை போய்க்கொண்டிருக்கின்றது. இழந்த கல்வியை மீளப்பெறுவதற்கு தமிழினம் தற்போது கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றது.
கல்வித் திட்டத்திட்டத்தில் பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வது என்றால் திறமை அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சிபார்சு செய்திருக்கின்றது. இந்த சிபார்சு நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அனைத்து தெரிவுகளும் தெற்கினை மையப்படுத்தித்தான் நடைபெறும் என்பதிலும் எதுவித ஐயமுமில்லை. தமிழினம் பல போட்டிகளைச் சந்தித்து பலமிழந்து நிற்கவேணடிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவற்றினையெல்லம் வைத்துப் பார்க்கன்ற போதுதான் மடடக்களப்பில் கிராமங்கள் தோறும் கல்வி அமைப்புக்ள உருவாக்கப்படல் வேண்டும்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்ட நிர்வாகசேவைப் போட்டிப் பரீட்சையில் எந்தவித தமிழர்களும் சித்தி எய்தவில்லை ஆனால் அப்பரீட்சையினை நாம் பெரும் போராட்டத்தின் மத்தியில் மீள் பரீட்சையினை நடாத்த வைத்து அதில் 45 தமிழ் பேசுகின்ற நிர்வாக உத்தியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழினம் பொருட்களை இழந்து, உயிர்களை இழந்து கல்வியினை இழந்து தற்போது நிலத்தினையும் இழந்து நிற்கின்றோம். யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 6000 ஏக்கர் நிலம் அபகரிக்கப் பட்டுள்ளது. மட்டக்களப்பில் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்துள்ளது என அரசாங்கம் குறிப்பிடும் அதேவேளை தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து இராணுவ மயமாக்கலுக்குப் பயன்படுத்தி வருகின்றது இந்நிலங்களில் பாடசாலைகளை அமைந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஏற்றுக்கொள்ளக்கூடும். அதனை விடுத்து இராணுவ முகாம்களை அமைக்கின்றார்கள்.
சுவீகரிக்கப்பட்ட நிலங்களை பார்வையிடுவதற்கு எதிர்கட்சிகள் சென்றால் இராணுவம் இருக்குமிடத்தில் அரசியல் வாதிகளுக்கு என்ன வேலை என இராணுவத்தினர் கேட்கின்றார்கள். அவசரகாலச் சட்டம் இல்லாத இன்றய நிலையில் தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பலாத்காரமாக அபகரித்து வருகின்றது. ஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வடக்கு கிழக்கில் உள்ள இராணுவதின் தொகையினை குறைக்குமாறு கூறியிருக்கின்றது. ஆனால் அதைவிடுத்து இராணுவ அதிகரிப்புக்கள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே இவற்றினையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நாம் தேசிய சமூகமயமாக்கலுக்கு கல்வியில் முன்நேற்றம்தேவை நம்மவர்கள் ஐந்தாம் ஆண்டு பரீட்சையில் தமது பிள்ளைகளின் மீது காட்டுகின்ற அக்கறை சாதாரணதரம், உயர்தரம், போன்ற பரீட்சைகளின் மீதும் அக்கறை காட்டி எதிர்காலத்தில் சிறந்ததொரு கல்விச் சமூகத்தினை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten