இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற எந்த ஊடகவியலாளரையும் கறுப்பு பட்டியலில் சேர்க்கவில்லை என ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் சரித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேற்கத்தேய செல்வந்த நாடுகள் ஆசிய நாடுகளின் சமாதானத்தை குழப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் இலங்கையில் அவ்வாறு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், மீண்டும் நாடு திரும்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில், இலங்கையின் ஊடகத்துறை அமைச்சு இல்லை என்று சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்குலக செல்வந்த நாடுகள் ஆசிய நாடுகளின் சமாதானத்தை குழப்ப முயற்சி!– அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 02:01.10 AM GMT ]
பெருந்தோட்டத்துறை அமைச்சரும், மனித உரிமைகள் பிரதிநிதியுமான மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகள் சமாதானத்துடன் அமைதியாக இருந்து வந்தன.
எனினும் மேற்கத்தேய நாடுகள் இலங்கை போன்ற அமைதியான நாடுகளில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் மூலம் அந்த நாடுகள் சுயலாபம் அனுபவித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே இலங்கை மீதும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten