தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

போர்க்குற்ற நாடான இலங்கையில் பொதுநலவாய மாநாடு!- ஐ.நா நிபுணர் யஸ்மின் சூகா அதிர்ச்சி!


மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கைக்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 03:23.28 AM GMT ]
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இலங்கையின் மனித உரிமைகள் ஆணையாளர் ப்ரதீபா மஹானாமஹேவா, பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 2ம் திகதி வரையில் லண்டனில் பொதுநலவாய நாடுகளின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வேண்டாம் என்று கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இலங்கையின்உண்மை தன்மையைஅறிந்துக் கொள்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக செயற்குழுவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக,இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள், நீதித்துறை மற்றும் ஊடகத்துறைக்கான சுதந்திரம் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற நாடான இலங்கையில் பொதுநலவாய மாநாடு!- ஐ.நா நிபுணர் யஸ்மின் சூகா அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 01:54.15 AM GMT ]
இலங்கையில் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளமை குறித்து ஐ.நா நிபுணர் குழுவின் ஒருவரான யஸ்மின் சூகா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்களில் ஒருவரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகா,  இலங்கை தனது சொந்த மக்களுக்கு எதிரான மீறல்களை இன்னும் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் ஏபிசி வானொலிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
இலங்கையில் மக்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதாகவும், காணாமற்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்களை விசாரிக்கா விட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய  தலைவர்களின் உச்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா கூறியுள்ளதை யஸ்மின் சூகா பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால், பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்த அவர்களை அனுமதிக்கக் கூடாது.

அவுஸ்திரேலியா உள்ளிட்ட, ஏனைய நாடுகள் தாம் மாநாட்டில் பங்கேற்போம் என்று பலவீனமான முறையில் கூறியுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten