தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில்!- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!


பாலித ரங்க பண்டாரவின் வாகனம் மீது தாக்குதல்!- மாகாண சபை உறுப்பினர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 10:26.15 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஷாந்த பண்டார உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார பயணித்த வாகனம் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் ரங்க பண்டார செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில்!- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 10:11.03 AM GMT ]
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013). அறவழியில், அமைதிவழியில் போராடிக்களைத்து, கண்டபலன் ஒன்றுமில்லை.
மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தங்கள் கிழித்தெறியப்பட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லாக்காசாக கிடப்பில் போடப்பட, இனி ஆண்டவன்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஆற்றாமையின் வெளிப்பாடே புதிய இளம் தலைமுறை போராட்ட வழிமுறையை மாற்றக் காரணமாக அமைந்தது.
தனித் தமிழ் ஈழமே தீர்வு' என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதற்கு தேர்தலில் தமிழர்களால் வழங்கப்பட்ட பேராதரவும், அதுவே மக்களின் ஆணையாக கொள்ளப்பட்ட வரலாறும், பொன் எழுத்துக்களால் என்றும் அழியாமல் பொறிக்கப்பட்டவை.
மக்கள் வழங்கிய ஆணையை புறம் தள்ளி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தந்தை செல்வாவிற்க்கு பின் வந்த மிதவாத அரசியல் தலைமைகள், சிங்கள அரசுடன் ஒப்பந்த இணக்கப்பாட்டு, சுயநல அரசியலில் சுகம்காண, நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற இளைஞர்களின் இன உணர்வே ஆயுதப்போராட்டமாக வெடித்தது.
பின்னர் 30 ஆண்டுகால, ஆயுதவழி முறையிலான தமிழீழத்திற்கான சுதந்திரப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் உன்னதமான தியாகங்களாலும் ஈடிணையற்ற ஈகங்களினாலும் செந்நீர் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டது.
எமது தாயக நிலப்பகுதியின் பெரும் பகுதி மீட்கப்பட்டு நிதி, நீதி, நிர்வாகக் கட்டமைப்புகளையும் நிறுவி ஒரு நிழல் அரசினையும் உருவாக்கி விடுதலையின் வாசலில் நின்ற போதே நாம் வீழ்த்தப்பட்டோம்.
தமிழீழம் என்பது வெறும் கனவல்ல அது சாத்தியம் தான் என்பதை எங்கள் தேசியத்தலைவர் எங்கள் கண்முன்னே உருவாக்கிக் காட்டினார்.
2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில், இலட்சக்கணக்கான எமது உறவுகளை இனவழிப்பு செய்வதன் ஊடாகவே தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு பின்னடைவினை சிங்கள பேரினவாத அரசினால் ஏற்படுத்த முடிந்தது.
அதுவும் சிங்கள அரசு தனித்து நின்று தமிழர்களை வீழ்த்துவதென்பது எப்போதுமே சாதித்திருக்க முடியாத காரியம்! வல்லாதிக்க சக்திகளின் துணையும், சதிகளும், சூழ்ச்சிகளும், காட்டிக்கொடுப்புகளுமே சிங்கள அரசுக்கு பலமாக மாறின.
இன்று ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், சர்வதேச மயமாகியுள்ள ஈழ விடுதலைப் போராட்டம், சனநாயக வழிமுறை ஊடாக தீவிரம் பெற்றுள்ளது.
தனித்தமிழ் ஈழமே தீர்வு என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக சட்டசபையிலும் நிறைவேறியுள்ளது. சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.
கிளர்ந்தெழுந்துள்ள தமிழக மாணவர்களின் எழுச்சி உலகத் தமிழர்களுக்கே புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
தேசத்தின் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அறப்போரும், பின்னர் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையில் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்து சர்வதேச மயமாகியுள்ள எமது போராட்டம், இன்று தேசத்தின் புதல்வர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten