தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்ய தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்


கேரள மீனவர்களுக்கு காட்டிய அக்கறையை தமிழக மீனவர்களுக்கு காட்டாதது ஏன்? கருணாநிதி கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 07:16.04 AM GMT ]
கேரள மீனவர்கள் மீது காட்டிய அதிக அக்கறையை தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு காட்டாதது ஏன்? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கேரள மீனவர்கள் மீதான அக்கறையில் நூற்றில் ஒரு பங்காவது தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு செலுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள கருணாநிதி, தமிழக மீனவர்களின் துயரங்களுக்கு உடனடியாக மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்ய தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 07:36.53 AM GMT ]
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டிலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன.
அவையாவன,
தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்ககூடிய அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவுசெய்யப்படவில்லை.
பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள் சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்கவேண்டும்.
ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது.
இந்த முயற்சிகள் வெற்றிபெற முடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூடிய விரைவில் தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய குழு வேண்டுகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னணியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அல்லது தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் இதில் சேரவிரும்பும் தமிழ் தேசிய இனத்தின் அபிலாஸைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய இனத்தின் ஒற்றமையை பலப்படுத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும் என்றும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten