தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

பெரிய உடைப்பில் பாவிக்கப்பட்ட பக்தர் ஷிகான் என்னும் ஏவுகணைகள் !


நாம் ஏற்கனவே பெரிய உடைப்பு பகுதியில் இலங்கை இராணுவத்தால் பாவிக்கப்பட்ட லேசர் கருவி ஒன்று தொடர்பான செய்தியை நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தோம். இவ்வகையான லேசர் கருவி, பாக்கிஸ்தான் தயாரிப்பான பக்தர் ஷிகான்(Baktar-Shikan) என்னும் ஏவுகணையை இயக்கவே பயன்படுகிறது. குறிப்பாக இந்த ஏவுகணை கவசவாகனங்களை தாக்கி அழிக்க பயன்படுகிறது. ஏவுகணை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அதன் கன்லோரரை பிறிதொரு இடத்தில் (பாதுகாப்பாக இருந்து) இயக்க முடியும். இவ்வகை ஏவுகணைகள் சுமார் 400 மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர்வரை சென்று தாக்கவல்லது. வெப்பத்தை பின் தொடர்ந்து சென்று தாக்கவல்ல இவ்வகை ஏவுகணைகளில் சில வகைகள் உள்ளது. பக்தர் ஷிகான் ஏவுகணையில் HJ- 7, HJ - 8, HJ - 8B என்று பலவகைகள் உள்ளது.

ஒரு பொருளை நோக்கி பலமான லேசர் கதிரை பிரயோகித்துவிட்டு, பின்னர் இந்த ஏவுகணையை ஏவினால், அது லேசர் கதிகள் தாக்கிய அதே இடத்தை தேடிச் சென்று தாக்கவல்லது. பெரும்பாலும் இரவில் தாக்குதல் நடத்த இது மிகவும் உகந்ததாகும். பல நாடுகளில் இதுபோன்ற ஏவுகணைகள் பாவிக்கப்பட்டு வந்தாலும் இலங்கை அரசிடம் உள்ள, பக்தர் ஷிகான் என்னும் இந்த ஏவுகணைகள் பாக்கிஸ்தானால் வழங்கப்பட்டவை ஆகும். அவற்றை வன்னிப் போரில் இலங்கை இராணுவம் பாவித்துள்ளார்கள். நகரும் இலக்குகளை தாக்க இவர்கள் இதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது புலிகளின் பலம்பொருந்திய படையணிகளில் ஒன்றாக விளங்கியது, கடற்புலிகள் ஆகும். கடல் புலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கவும் இவ்வகையான ஏவுகணைகளை இலங்கை இராணுவம் இதனை பயன்படுத்தியுள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten