கடற்கொள்ளையர்களை தடுக்கும் நோக்கில் சோமாலிய மற்றும் மத்திய தரைக் கடலில் கண்காணிப்பு மேற்கொள்ளும் கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு சென்றுள்ளன.
கப்பலுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிமித்தம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
Akebono DD- 108 மற்றும் Hamagiri DD- 155 ஆகிய இரு போர்க்கப்பல்களே இவ்வாறு நங்கூரமிட்டுள்ளன.
இக்கப்பல்களிலுள்ள ஜப்பான் கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையிருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Akebono DD- 108 என்ற கப்பலில் இரு ஹெலிகொப்டர்களை தரையிறக்கக்கூடிய வசதிகள் காணப்படுவதோடு, அதில் 190 கடற்படை அதிகாரிகள் பயணம் செய்கின்றனர்.
Hamagiri DD- 155 கப்பலும் ஹெலிகொப்டர்களை தரையிறக்கும் வசதிகளைக் கொண்டுள்ளதுடன் அதில் 220 கடற்படை அதிகாரிகள் பயணம் செய்ததாக இலங்கை கடற்படைத் தகவல்கள் குறிப்பிட்டன.
Geen opmerkingen:
Een reactie posten